ஹலோ நண்பர்களே
என்னங்க போன தொட்டாலே ஆன்லைன்ல பணம் சம்பாதிக்கலாமான்னு மெசேஜ் வருதா?
அப்படின்னா நீங்க இதை கண்டிப்பா படிக்கணும்.
முதல்ல நம்ம மனசுக்குள்ள வர கேள்வி ஆன்லைன்ல பணம் சம்பாதிக்க முடியுமாங்குற கேள்வி தாங்க.
இதுக்கு பதில் முடியும் கண்டிப்பா முடியும் கொஞ்சம் முயற்சியும், பொறுமையும் இருந்தால் எல்லாராலையும் ஆன்லைன்ல பணம் சம்பாதிக்க முடியும்.
அடுத்த கேள்வி மனசுல தோன்றது எப்படி சம்பாதிக்கலாம்? எந்த விதத்தில் எல்லாம் சம்பாதிக்கலாம்?
இருக்குங்க நிறைய வழிமுறை இருக்குங்க ஆன்லைன்ல பணம் சம்பாதிக்க.
உங்களால கொஞ்சம் பணம் முதலீடு செய்ய முடிஞ்சால் நீங்க பொருட்களை வாங்கி விற்கிற ஆன்லைன் பிசினஸ் செய்யலாம்.
அல்லது கைவினைப் பொருட்கள் செய்து அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் விற்கலாம்.
இல்ல என்னால முதலீடு செய்ய முடியாது ஆனால் ஆன்லைன்ல பணம் சம்பாதிக்க ஆவலா இருக்கேன் எனக்கு கூடுதலா வருமானம் வேணும் அப்படி நினைக்கிறவங்க கண்டிப்பா இதை படிக்கணும்.
1. கணிதம் அறிவியல் போன்ற பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் என்றால் ஆன்லைனில் டியூஷன் எடுக்கலாம் இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்கே விரும்புகிறார்கள் அதற்கு ஏற்ப நீங்கள் ஆன்லைனில் பாடம் எடுத்தால் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
2. உங்களுக்கு கணினி நன்றாகத் தெரியும் என்றால் எம் எஸ் வேர்ட் எம் எஸ் எக்ஸ் எல் போன்றவற்றில் டாட்டா டைப்பிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் இந்த வகையான வேலையை டாடா என்ட்ரி வேலை என்று அழைப்பார்கள்.
3. உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுங்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களுக்கும் படிக்க தூண்டும் வகையில் சுவாரஸ்யமான சிறுகதைகள் எழுதுதல் அல்லது உங்களுக்கு நன்று தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றியோ துறையை பற்றியோ அல்லது ஒரு பொருளின் பற்றியோ விளக்கமாக எழுதி அதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் டிஜிட்டல் புத்தக வெளியிடலாம். அல்லது இணையதளத்தில் பதிவிட்டு பணம் சம்பாதிக்கலாம். இ புக் வெளியிடுவதும், இணையதளம் உருவாக்குவது இலவசம்தான். இவ்வகையில் பணம் சம்பாதிப்பதை பிளாகிங் என்று சொல்வார்கள்.
4. அப்பிலியேட் மார்க்கெட்டிங்: உங்களை சோசியல் மீடியாவில் பின்தொடர்பவர்களின் விருப்பங்களை பற்றி நன்கு அறிந்து அவர்களின் தேவைக்கு ஏற்ப பொருட்களை பரிந்துரை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் இன்று ஆன்லைனில் வேலை ஆரம்பித்து நாளைக்கு பணம் கையிலோ அல்லது வங்கி கணக்கிலோ கிடைத்து விடும் என்று நினைக்காதீர்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிகவும் அவசியமானது பொறுமை மற்றும் கடுமையான உழைப்பு. குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கு பொறுமையாக கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும்.
இங்கு ஏதாவது தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு விளக்கம் தேவைப்பட்டாலும் கமெண்ட் செய்யவும்.
முடிந்தால் ஒரு ஷேர், ஒரு லைக்